--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மேலும் 3949 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு!!

rwe

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கையும் 1141 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்றைய நிலவரம் குறித்த சுகாதாரத் துறையின் பட்டியல் படி, தொடர்ந்து 5-வது நாளாக கொகோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3500 ஐ கடந்து பதிவாகியுள்ளது.

 

இதன்படி நேற்று 3940 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3949 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 86,224ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக மதுரையில் இன்றைய பாதிப்பு 303 ஆக பதிவாகியுள்ளது.

 

மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,212ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 47,749ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று கொரோனாவுக்கு 62 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கையும் 1,141ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon