--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5975 பேருக்கு தொற்று உறுதி… உயரிழந்தோர் 97 பேர்.. சென்னையில் 1298 பேருக்கு பாதிப்பு!!

21

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயரிழப்பும் 97 ஆக பதிவான நிலையில் சென்னையில் இன்றும் 1,298 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக ஒரே சீரான அளவில் உள்ளது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்திற்குள்ளும், உயிரிழப்பு நூறு என்ற அளவிலுமே உள்ளது.

 

இன்றைய நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எனவே, தமிழகத்தில் இன்று 5975 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும் இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,047ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 3,19,327 ஆக உயர்ந்இ ள்ளது.

 

இன்று மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால். இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 6,517ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1298 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் சென்னையில் மட்டும் மொத்தம் 1,25,389 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

இது வரை, தமிழகம் முழுவதும் 42,06,617 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 68,111 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon