--- --:--:-- --

திருப்பூர், நல்லூரில்,வல்லவன் ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க் திறப்பு விழா…!

22

திருப்பூர், காங்கேயம் ரோடு, நல்லூரில் இருந்து காசிபாளையம் செல்லும் ரோட்டில் ஈஸ்வரன் கோவில் அருகில் எஸ்ஸார் பெட்ரோலியம் நிறுவனத்தின் டீலராக வல்லவன் ஏஜென்சீஸ் என்னும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு வல்லவன் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சசிதரன் தலைமை தாங்கினார்.

 

எஸ்ஸார் நிறுவனத்தின் டிவிசனல் இன்ஜினியர் ஸ்ரீனிவாசன், விற்பனை அதிகாரி மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வல்லவன் குரூப் நிறுவன பங்குதாரர்புவனேஸ்வரன் அனைவரையும்  வரவேற்றார்.                  எஸ்ஸார் நிறுவனத்தின் பீல்டு அதிகாரி முஹம்மது ரிஷ்வான் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை தொடக்கி  வைத்தார்.

தேனி, ஸ்ரீ பாலகிருஷ்ணா எண்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஆறுமுகம் பெட்ரோல் பங்க் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் வல்லவன் குரூப் நிறுவன பங்குதாரர்கள் பழனிக்குமார், சக்திவேல், இடத்தின் உரிமையாளர் அருணாச்சலம் மற்றும் நடராஜ், சுந்தரம், மனோஜ்குமார், பவித்ராதேவி, விக்கி, தக்சித் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 

மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு  ரூ.500 க்கு பெட்ரோல் அடித்தவர்களுக்கும், டீசல் அடித்த  3 சக்கர, 4 சக்கர வாகன  ஓட்டிகளுக்கும் பெட்ஷீட், துண்டு, வேட்டிகள் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

வல்லவன் பெட்ரோல் பங்கில் அனைத்து வாகனங்களுக்கும் இலவசமாக காற்று மற்றும் நைட்ரஜன்  அடிக்கப்படுகிறது.  இத்துடன்  வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வசதி, முதலுதவி வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon