ஜூலைக்குள் 5.5 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்!
டெல்லியில் ஜூலை மாத கடைசியில் ஐந்தரை லட்சம் பேரை கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் மனிஸ் சிசோடியா எச்சரித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தலைமையில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இதனை தெரிவித்தார். அப்போது கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எண்பதாயிரம் படுக்கைகள் தேவைப்படும் என்று குறிப்பிட்டார்.
கூட்டத்தில் கொரோனா சமூக பரவலாக இல்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியதால் அதுபற்றி விவாதிக்க வில்லை என்று அவர் தெரிவித்தார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் நிலைமை வேறுவிதமாக இருப்பதாக மனிஸ் சிசோடியா கூறினார்.







