மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வருகை – அங்கு மருத்துவர்களை சந்தித்து அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார்.
தி.நகர் பழக்கடை ஜெயராமன் மகனான ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு முதன்முறையாக உயிரிழந்த எம்.எல்.ஏ இவர் என்பது வருத்தத்திற்குரியது.







