--- --:--:-- --

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை… பரிசோதனை முடிவில் தகவல்

11.1

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக அமைச்சர்களில் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு ஆகிய 3 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழக அரசியல் புள்ளிகள் கொரோனா கலக்கத்தில் உள்ளனர்.

 

அமைச்சர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருடன் பயணிக்கும் அதிகாரிகள், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, பிசிஆர் கருவி மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது.

 

இந்நிலையில் இந்தப் பரிசோதனை முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் எவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon