--- --:--:-- --

60 வயது மூதாட்டியால் 200 பேருக்கு பரவிய கொரொனா..!

13

நீலகிரி மாவட்டம் தங்காடு உறகளி கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணம் ஒன்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் கோவையில் இருந்து வந்த அறுபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கலந்து கொண்டார்.

 

இதற்கிடையில் காய்ச்சலோடு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அந்த பெண் தனக்கு சோதனை செய்ததை மறைத்து திருமணம் மற்றும் ஒரு கிராமத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.

 

இதற்கிடையில் பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத்துறையினர் அவசர அவசரமாக அந்த பெண்ணின் தொடர்புகளை தேடிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில் திருமணத்தில் கலந்து கொண்ட 190 பேருக்கு கொரொனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதையடுத்து தங்காடு ஒரநல்லி கிராமமே அச்சத்தில் உறைந்து போனது.

 

இந்த நிலையில் கொரொனாவை பரப்பிய பெண் உட்பட 2 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அந்த திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 8 கிராமங்களுக்கு சென்றதால் அந்த கிராமங்களிலும் தொற்று பரவி எண்ணிக்கை கூடியது.

 

இதனை அடுத்து ஆட்சியரின் கடும் நடவடிக்கை காரணமாக கொரொனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் கொரொனாவால் 200 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon