ஆள் இல்லாத வீட்டிற்கு 11 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்..!
நாகை மாவட்டத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக பூட்டிக்கிடந்த வீட்டிற்கு 11,000 ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஒரையாடு அடுத்துள்ள சங்கரன்பந்தலில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் வீடு கடந்த ஓர் ஆண்டாக மூடிக்கிடந்து உள்ளது.
ஆனால் அந்த வீட்டிற்கு தற்போது 11,000 ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அந்தப் பகுதியில் பல்வேறு வீடுகளிலும் மின்கட்டணம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொரொனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வரும் நிலையில் மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது கடும் கண்டனம் எழுந்துள்ளது.







