--- --:--:-- --

மீண்டும் அச்சமூட்டும் கொரோனா..கட்டுப்பாடுகள் என்னென்ன..?

4

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் லட்சத்தை எட்டியிருப்பதால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

 

இதன்படி சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் வருகை தருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனை போதிய அளவில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆக்ஸிஜன் கையிருப்பு மற்றும் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை சீரான விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு மன்சுக் மாண்டவியா மாநில மருத்துவத்துறை செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

 

Right Menu Icon