தமிழகத்தில் ஒரேயடியாக “ஜம்ப்” ஆகும் கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3509 ஆனது.. 45 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக மிக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று மட்டும் 3509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள் ள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் இப்போது உச்சத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் , உயிரிழப்பும் உச்சத்திற்கு ஜம்ப் ஆகி வருகிறது. நேற்று வரை தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழே பதிவாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து 3509 என பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து பீதியை கிளப்பி வருகிறது.
இதில் சென்னையில் மட்டும் பாதிப்பு 1834 ஆக பதிவான நிலையில் அடுத்தபடியாக மதுரையில் 203, திருவள்ளூர் I70, வேலூர் 168, ராமநாதபுரம் 140, தேனி 68, சேலம் 59, கோவை 29, திருப்பூர் 7, ஈரோடு 5 என பல மாவட்டங்களிலும் எண்ணிக்கை எகிறியுள்ளது. இன்று தொற்று பாதிப்பு பதிவாகாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மட்டுமே.
தமிழகத்தில் இதுவரை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆகியுள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 911 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று மட்டும் 45 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.






