கொரொனாவால் பெற்றோர் உயிரிழந்ததை அறியாமல் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி!
சென்னையில் மாற்றுத்திறனாளியும், அவரது மனைவியும் கொரோனாவுக்கு அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியாமல் மனவளர்ச்சி குன்றிய அவர்களின் மகன் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கேவிபி கார்டன் சேர்ந்த 62 வயதான அருணாச்சலம் இயற்கை ஆர்வலர் மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட. கண் பார்வை குறைபாடு உடைய இவருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அருணாச்சலத்தின் மனைவி கீதா மற்றும் மனவளர்ச்சி குன்றிய 26 வயது மகன் மணிக்கு தொற்று பரவியது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழக்க மகன் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். சுயமாக இயங்க இயலாத வாலிப மகனை பெற்றோர் இருவரும் கண்ணை இமை காப்பது போல காப்பாற்றி வந்தனர். ஆனால் பெற்றோரை பறிகொடுத்தது தெரியாமல் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் வாலிப குழந்தை.






