--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மேலும் 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…  உயிரிழப்பு 88 

images

மிழகத்தில் கொரோனா நிலவரம்  குறித்து  இன்று சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

 

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து, 480 ஆக அதிகரித்துள்ளது.

 

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 820  பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 4  லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா பாதிப்பால் இன்று 88 பேர்  உயிரிழந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon