சீனாவில் புத்தகங்களை தலையில் கவிழ்த்துபோட்டு பாடம் படிக்கும் மாணவர்கள்..!
சீனாவில் மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளியில் புதிய உத்தி கையாளப்படுகிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பகுதியில் சிறு வயதிலேயே மாணவர்கள் கிட்ட பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் அதற்குள்ளாகவே கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புத்தகங்களை தலையில் சுமந்து கொண்டு எழுதும் வீடியோ வெளியானது.
இதற்கு பதிலளித்துள்ள ஆசிரியர்கள் தலையில் உள்ள புத்தகங்கள் விழாமல் நோட்டுகளில் எழுதும் போது மாணவர்கள் புத்தகங்கள் சறுக்காமல் மேலும், கீழும் பார்த்துக் கொள்வதால் அவர்களுக்கு கிட்டப்பார்வை குறைபாடு சரியாக தெரிவித்துள்ளனர்.






