நடிகை ராகேவை திருமணம் செய்துள்ள நடிகர் ஆரவ்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ்
திருமணம் கொரொனா தொடர்பான விதிமுறைகளுடன் சென்னையில் நடைபெற்றது. தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்றவர்.
மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரும், கௌதம் மேனன் இயக்கியுள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் நாயகி ராகேவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கொரொனா விதிமுறைகளின்படி நடைபெற்று முடிந்த இவர்களின் திருமணத்தில் கேஎஸ் ரவிக்குமார், ஹரிஷ் கல்யாண், பிந்துமாதவி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.






