அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரொனா உறுதி! மருத்துவமனையில் அனுமதி!
உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உளுந்தூர் பேட்டையில் வசித்து வரும் குமரகுருவுக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முடிவில் கொரொனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது முடக்க காலத்தில் பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகளை செய்து வந்ததாக பரமக்குடியைச் பிரபாகரனுக்கு இன்று காலை கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அமைச்சர் கேபி அன்பழகன் உட்பட மொத்தம் ஏழு எம்எல்ஏக்களுக்கு கொரொனா இருப்பது உறுதியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




