--- --:--:-- --

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து..!

10

பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் நேற்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது.

 

 

பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார். இந்தநிலையில், சைவ, வைணவ சமயம், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜரானதால் பிடிவாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon