நித்தி அகர்வால் வெளியிட்ட சரக்கு வீடியோவால் சர்ச்சை..!
சரக்கு பாட்டிலை திறந்து முகர்ந்து பார்க்கக் கூடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நடிகை நித்தி அகர்வால். இந்த வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
முன்னணி நடிகையான ஹன்சிகா, மோத்வானி காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிகமாக பணம் வாங்கிவிட்டு வெளிநாட்டு மதுபானத்தை தங்களுடைய சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பட்டியலில் ஈஸ்வரன், பூமி போன்ற படங்களில் நடித்த நித்தி அகர்வாலும் சேர்ந்துள்ளார். அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் சரக்கு பாட்டிலை திறந்து அதை முகர்ந்து பார்த்து குடிக்கலாம் என சொல்லக்கூடிய வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் எதிர்ப்பு எழுந்துள்ளது.





