--- --:--:-- --

கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று ஆலோசனை!

1

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவினர் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கொரொனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவினர் அவ்வப்போது அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில் எதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது என்று ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

காரணத்தை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மருத்துவரின் ஆலோசனையை தொடர்ந்து கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon