--- --:--:-- --

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை..!

1

மிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் முக்கிய துறை செயலாளர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவாகவே உள்ளன. தற்போது அமலில் உள்ள பொது முடக்க கட்டுப்பாடுகள் வரும் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

இந்த நிலையில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்த மருத்துவத் துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 

11 மாவட்டங்களில் தொற்று வேகம் குறைந்து வரும் நிலையில் 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி. நகைக் கடைகள் மற்றும் துணிக் கடைகள் திறப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon