பிரதமர் மோடியை கொலை செய்ய சதி..!
பிரதமர் மோடியை கொலை செய்ய சதி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி விகாஸ் சென்று சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களின் வீடுகளில் இருந்து பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, சிமி உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருவருடனும் கேரளா, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்ததாகவும் இவர்களுக்கு துருக்கி, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து நிதி உதவி கிடைத்ததாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை விசாரணையை தொடங்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




