--- --:--:-- --

காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி!

2

மிழ்நாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், நேற்று (ஆக.29) காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கினார்.

 

“மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக மாணவர்களுக்குக் கல்வித் தொகையை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறேன்” என கூறி நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்துவிட்டு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் சசிகாந்த் செந்தில் எம்.பி. தொடங்கிய இந்தக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

 

இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து அவர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உண்ணாவிரதம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்ததால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Right Menu Icon