--- --:--:-- --

ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை இருக்கிறது – கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் – திருமாவளவன் நம்பிக்கை

10

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி கூறுகையில், “ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உள்ளது.

 

முதல்வர் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்காக மீண்டும் காங்கிரஸ் கேட்க கூடாது என்று இல்லை. தி.மு.க, காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வை காண்பார்கள் என நம்புகிறேன். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன்.” என்று கூறினார்.

Right Menu Icon