வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நபரை காப்பாற்றிய காவலர்..!
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரும் பொதுமக்களும் இணைந்து தக்க சமயத்தில் காப்பாற்றியுள்ளனர்.கடப்பா மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்த நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் உள்ள பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து அந்த காவலர் உடனடியாக விழுந்த நபரின் காலை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினார். இதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அன்பு ராஜன் அந்த காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.






