--- --:--:-- --

நாய்களை தாக்கி கொன்றவர்கள் மீது புகார்..!

5

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாய்களை கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொன்ற விவகாரத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூரை அடுத்த கோவில் மேடு புதூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு நாய்களை மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இதை அறிந்த சமூக ஆர்வலர் நாகராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

நடராஜ், பாலசுப்பிரமணியம், பன்னீர் கந்தசாமி என்ற நான்கு பேரும் இரண்டு நாய்களை அடித்து துன்புறுத்திக் கொண்டதாக புகார் மனு அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் யாரும் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கி விட்டதாக நாகராஜ் தாராபுரம் அரசு மகளிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இதனிடையே புதைக்கப்பட்ட நாய்களின் உடல்களை தோண்டி எடுத்து கூராய்வு செய்யப்பட்டது. தாங்கள் வளர்த்த 15,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை கடித்துக் கொண்டதால் நாய்களை அடித்ததாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon