--- --:--:-- --

100 சதவீத இருக்கைகளுடன் மாஸ்டர் திரைப்பட டிக்கெட் வினியோகம் என புகார்..!

1

மிழக அரசு உத்தரவை மீறி காஞ்சிபுரத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் மாஸ்டர் திரைப்பட டிக்கெட் வினியோகம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படங்கள் திரையிடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த வாரம் விஜய் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசு அதற்கான அனுமதியுடன் அரசாணை வெளியிட்டது.

 

ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அரசாணையை ரத்து செய்து கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விலை தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள் காஞ்சிபுரத்திலுள்ள பாபு திரையரங்கில் அரசின் உத்தரவை மீறி 100% இருக்கைகளுடன் முன் பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 

நோய்த்தொற்றும் அபாயம் இருப்பதால் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon