விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவலை கோலி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். மேலும் குழந்தையும் அனுஷ்கா சர்மாவும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதை சுட்டிக்காட்டி விடுமுறை எடுத்துக்கொண்டு பாதியில் கோலி நாடு திரும்பியுள்ளார்.
இவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் தாயையும் சேயையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள தாகவும் கோலி தெரிவித்துள்ளார்.






