--- --:--:-- --

திடீரென்று சைக்கிளில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு..!

2

புதுக்கோட்டையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீரென்று சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர் கீழராஜவீதி பால் பண்ணை மகளிர் கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்பொழுது உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்த அவர் மேலும் முக கவசம் இல்லாமல் சாலைகளில் நடந்து வந்து அவர்களுக்கு அறிவுரை கூறி முக கவசத்தை வழங்கினார். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் பதிவான வழக்குகள் குறித்த விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon