மருமகனின் தோழி மீது ஆசிட் வீசிய மாமனார் !
கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் கணவரின் நண்பருடைய மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் , ராதா தம்பதியினர் கோவையில் வந்து தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளனர்.
அப்பொழுது ஸ்டாலினுக்கு கட்டட வேலை செய்ய வந்த சந்திரசேகரன் என்பவர் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ராதா கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ராதா மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்தவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ராதா மீது ஆசிட் வீசியது ஸ்டாலினின் நண்பரான சந்திரசேகரின் மாமனார் தெரியவந்துள்ளது. மேலும் ராதாவுடன் சந்திரசேகர் பழகி வருவதால் தனது மகளை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என சந்தேகப்பட்ட இளங்கோவன் ராதா மீது ஆசிட் வீசியது உறுதியானது.
யாரும் இல்லாத நேரத்தில் ராதாவை பின்தொடர்ந்து சென்று யூரிக் ஆசிட்டை அவரது முகத்தில் வீசினேன் என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





