கூட்டு பாலியல் வன்கொடுமை! கைது செய்யக்கோரி
ஓமலூர் அருகே 6 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்ய கோரி ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பள்ளக்காட்டூர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் கடந்த 14ஆம் தேதி பள்ளி முடித்து வீடு திரும்பிய போது அவரை 3 பேர் சோளகாட்டிற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




