--- --:--:-- --

வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை எதிரொலி..! வாளையார் சோதனைச்சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு !!!

3

கேரளா, கர்நாடக, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அனைத்தும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா முன்னெச்கரிக்கை நடவடிக்கையாகவும், வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிற மாநிலங்களின் எல்லைகளையும் மூடும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.இது தொடர்பான தமிழக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் இன்று முதல் 31-ந் தேதி மூடப்படுகிறது. பால், பெட்ரோல், டீசல் காய்கறிகள், மருந்துகள், கேஸ் சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்களுக்கும் அனுமதி உண்டு.

 

அத்தியாவசிய தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் மற்றும் வாகனங்களில் வருவோர் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் அரசு அனுமதித்த வாகனங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லவோ, தமிழகத்திற்குள் நுழையவோ தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் தமிழக – கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனைச்சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது,கேரளத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் முழு பரிசோதைக்கு பின்னரே அனுமதிக்கவும்,அத்தியாவசிய தேவையான பால், காய்கறிகள், பெட்ரோல், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இச்சோதனையில் வருவாய் துறை,காவல் துறை,சுகாதார துறை,போக்குவரத்து துறையினர் இணைந்து செயல்படவும்,முழுமையான பரிசோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கவும்,இருசக்கர வாகனங்களில் வரும் பயணிகளை முழு உடல் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

 

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்,வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon