இந்தியாவில் சைடஸ் கேடில்லா நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல்..!
கொரொனா பரவலுக்கான அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவிலேயே தயாரான சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைக்கோவிட் தடுப்பூசிகள் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகிலேயே டிஎன்ஏ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி ஆன சைக்கோவிட் தடுப்பூசி குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் செலுத்தலாம் என மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே புதிய தடுப்பூசிகள் கோவாக்ஸின், கோவிஷீல்டு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது சைக்கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






