லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனப் படைகள்..!
லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனப் படைகளை விரட்டி அடிக்க 20 மணி நேரம் வரை இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சண்டையிட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நன்னாளில் அவர்களுக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்வான் பள்ளத்தாக்கின் மட்டுமின்றி கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் லடாக் எல்லையை ஒட்டிய சில பகுதிகளிலும் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துமீறி உள்ளே நுழைந்த சீன வீரர்களை இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த 21 வீரர்கள் சுமார் 20 மணி நேரம் வரை எதிர்த்து நின்று விரட்டி அடித்திருப்பதாக அந்த படையின் தளபதி தேஷ்வால் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தில் 21 வீரர்களுக்கு வீர தீர விருதுகள் வழங்க பரிந்துரை செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






