--- --:--:-- --

திருச்சியில் இளைஞரை தாக்கிய 10 பேர் அடங்கிய கும்பல்..!

9.1

கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞரைக் கடத்தி சென்று தாக்கி கொலை செய்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரை 10க்கும் மேற்பட்டோர் கடத்தி சென்று புதுக்கோட்டை மாவட்டம் அரூர் அருகே உள்ள கிடங்கில் வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு கிடங்கிற்கு விரைந்த அப்பகுதி மக்களை கண்டு கடத்தல் கும்பல் தப்பியோட முயற்சித்த ஒருவர் தப்பி ஓடிய நிலையில் அசாருதீன் உள்ளிட்ட 7 பேரை மக்கள் மடக்கிப் பிடித்தனர்.

 

அங்கிருந்து தப்பித்த மேலும் நான்கு பேரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். படுகாயமடைந்த ரகுமான் உயிரிழந்ததால் 11 பேரை கைது செய்து காவல்துறை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon