--- --:--:-- --

எல்லையிலிருந்து பின் வாங்கிய சீனா..!

3

எல்லையில் தங்களது படையை எல்லைப் பகுதிக்கு திரும்ப சீனா சம்மதம் தெரிவித்து இருக்கிறது. சீனா இறங்கி வருவதற்கான காரணம் என்ன? கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவத்திற்கும், இந்தியப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து அந்த நாடு வாய்திறக்கவில்லை.

 

இதனிடையே எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ ஆகியோருக்கு இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. இதுகுறித்து செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இரு தரப்பும் பரஸ்பரம் அமைதி வழியில் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதை போல் இரு தரப்பிலும் ராஜாங்க மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடத்த இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன. எல்லாவற்றையும் விட முக்கியமானது ஆக்கிரமிப்புகளை விட்டு முந்தைய எல்லைப் பகுதிக்கு திரும்பி செல்ல சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

 

இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் இந்திய எல்லைப்பகுதியில் ஆக்கிரமித்திருந்த சீன படைகள் இரண்டு கிலோமீட்டர் வரை பின் வாங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. லடாக் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பயணம் 59 சீன செயலிகளை தடை செய்தது.

 

சீன பொருட்களை புறக்கணிப்போம் என இந்தியா முழுவதும் எழுந்த குரல்கள் ஆகியவை சீனாவின் இந்த மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்கின்றது பாரதிய ஜனதா கட்சி.எனினும் சீனாவையும் அதன் வார்த்தைகளையும் எப்போதும் நம்பவே கூடாது என்பதுதான் 1962 போர் தொடங்கி பல தருணங்களிலும் இந்திய கற்றது இந்த மிகப்பெரிய பாடம்.

 

அஜித் தோவல் மற்றும் வாங் இ ஆகிய இருவருக்கிடையே தொலைபேசி உரையாடலுக்கு பிறகு சீன தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் சீனா பிராந்திய இறையாண்மையையும், எல்லைப் பகுதியையும் அமைதியில் திறம்பட பாதுகாக்கும் என அழுத்தமாகவே குறிப்பிட்டுள்ளது. எனவே அமைதிப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தும் அதே வேளையில் சீனாவின் போர் தந்திரங்களை தடுக்கும் பணிகளையும் இந்திய அரசு முடுக்கிவிட வேண்டிய தேவையும் உள்ளது.

Leave a Reply

Right Menu Icon