--- --:--:-- --

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட விபரீதம்..!

14

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட விபரீத சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

 

அங்குள்ள மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்கும் குறைவான 12 குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட வந்திருந்த நிலையில் சுகாதார பணியாளர்களின் அலட்சியப் போக்கால் சானிடைசர் கொடுக்கப்பட்டது.

 

அவர்களில் ஒரு குழந்தைக்கு வாந்தியும் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து நடந்த விசாரணையில் இது அம்பலமானது. இதை தொடர்ந்து 12 குழந்தைகள் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

பணியில் இருந்த மூன்று சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Leave a Reply

Right Menu Icon