--- --:--:-- --

6 பள்ளிகளுக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் சம்மன்..!

2

சிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளரிடம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதேபோல் பாலியல் புகாருக்கு ஆளான விளையாட்டு பயிற்சியாளர் கெவிராஜ் மற்றும் நாகராஜனின் வழக்குகளும் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து விட்டன.

 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

 

இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிந்தும் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு – அதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் விசாரணைக்கு ஆஜராக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

 

அதன்பேரில் நேற்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜரான தாளாளர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் முதல்வர் கீத கோவிந்த ராஜன் ஆகியோரிடம் மாலை 6.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

 

அதைப்போல முதன்மை கல்வி அலுவலரிடமும் இந்த விவகாரத்தை முதலில் சமூக வலைத்தளத்தில் வெளிக்கொண்டுவந்த பெண்ணிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். சிறையிலுள்ள ஆசிரியர் ராஜகோபாலலன் குற்றத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

எனவே சிறை துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று ராஜகோபாலனை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 

சமூக வலைதளங்களில் கூறப்பட்ட பாலியல் புகார்கள் தொடர்பாக சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி, செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, மஹரிஷி பள்ளி, சுசில்கரி பள்ளி ஆகிய ஆறு பள்ளிகளுக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருப்பதாக குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் சரஸ்வதி கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon