--- --:--:-- --

ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு..!

1

ன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பயில கூடிய மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

 

கலை அறிவியல் கல்லூரியில் பயில கூடிய மாணவர்கள் என அனைவருக்குமே ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

 

இதனால் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

நேரடி வகுப்புகளை போன்ற ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும். அதே போல ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, வகுப்புகளை முழுவதுமாக செய்வதற்கான நடவடிக்கை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon