கன்னத்தில் அறைந்த எஸ்.பியை எட்டி உதைத்த முதலமைச்சரின் பாதுகாவலர்..!
ஹிமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சரின் பாதுகாவலரும் குலு மாவட்ட எஸ்பி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வரவேற்க அந்த மாநில முதல்வர் ஜெயராம் தாகூர் சென்று இருந்தார். அப்போது ஏற்பட்ட சலசலப்பில் மாவட்ட எஸ்பி முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்தார்.
பதிலுக்கு முதலமைச்சரின் பாதுகாவலரும் எஸ்பிஐ உதைத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







