சசிகலாவிடம் தொலைபேசியில் பேசிய 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்..!
சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியதாக மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்களுடனும் அதிமுக தொண்டர்களுடனும் தொலைபேசியில் பேசி வருகிறார்.
இதுவரை 90-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 பேரை நீக்கம் செய்த ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
சசிகலாவுடன் பேசியதாக இதுவரை 20 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.







