--- --:--:-- --

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..புதிய தொழில்நுட்பப் பூங்கா இன்று திறப்பு..!

9

கோவை மாவட்ட விளாங்குறிச்சியில் புதிய தொழில்நுட்பப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலம் கோவை செல்கிறார்.

 

அங்கிருந்து விளாங்குறிச்சி செல்லும் முதலமைச்சர் 3.94 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதையடுத்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க, தொழில் நுட்ப அமைப்பினர் வகைகளுடன் கலந்துரையாடுகிறார்.

 

மேலும் தமிழக வீட்டு வசதி வாரிய நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களையும் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்க உள்ளார். நாளை செம்மொழிப் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கோவை மத்திய சிறை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

 

Right Menu Icon