--- --:--:-- --

தரவுகளுடன் கேள்விகேட்ட முதல்வர்.. அதிர்ந்த நிர்வாகிகள்!

1

ட்டமன்றத் தேர்தல் பணிகளில் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்துவிடக்கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 

விருதுநகரில் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், மக்களவைத் தேர்தல் போல சட்டமன்றத் தேர்தலிலும் நூறு சதவீதம் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

 

வெற்றியை நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது எனவும், அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றுள்ளது, இதனை மக்களுக்கு உணர்த்தும்படி திமுக பரப்புரைகள் அமைய வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும் எனவும், விருதுநகரில் உள்ள ஏழு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

 

புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர், திமுக நிர்வாகிகளிடம் கேள்விகளைக் கேட்டதால் நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon