திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் விஜய் சந்திப்பு..!
சென்னை திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்தித்துக் கொண்டனர். திருவான்மியூர் உள்ள தனியார் மண்டபத்தில் ஏஜிஎஸ் நிறுவன இல்லத் திருமண விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் பரஸ்பரம் கை குலுக்கி நலம் விசாரித்து கொண்டனர். இருவரும் சந்தித்துக்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.





