சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கூட்டணி கட்சியினரும் டெல்லியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிலையில் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பதிவிட்டவர் நீண்ட கால நண்பரான சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அவர் மத்திய அரசின் முக்கிய பங்காற்றுவார் என்றும் தென் மாநிலங்களுக்காக வாதிடுவார். உரிமைகளை பாதுகாப்பார் எனவும் தான் நம்புவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.





