--- --:--:-- --

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்..!

5.1

மிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை இன்று காலை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தால் என்னென்ன பயன்கள் : அனைவருக்கும் நியாய விலை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

 

இந்த திட்டத்தை தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசித்து வருபவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். யாருக்கும் ரேட்ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்று நிலை இருக்காது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் கையிருப்பு வைத்திருக்க கூடுதலாக 5 சதவீத பொருட்கள் வழங்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

 

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார். ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கூறிய அமைச்சர் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon