--- --:--:-- --

தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறப்பு..!

7.1

மிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன.

 

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக திரையரங்குகளை திறப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.

 

இந்நிலையில் தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பிறகு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. அதன்படி டிக்கெட் கவுண்டர்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

திரையரங்கில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வி‌பி‌எஃப் விவகாரத்தால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என திரைப்பட உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

இதனால் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் பிற மொழி படங்களில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் விபிஎஃப் கட்டண பிரச்சனையில் திரை துறையை காப்பாற்ற திரையுலகினர் முன்வர வேண்டும் என க்யூப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க 50 சதவீதமாக குறைக்கப்பட்ட கட்டணம் பின்னர் 50 விழுக்காடாக குறைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தொற்று கால நெருக்கடியைப் பயன்படுத்தி தயாரிப்பாளர் சங்கம் அதிக சலுகைகளை பெற முயற்சிப்பதாக க்யூப் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon