--- --:--:-- --

விஜய் அரசியல் குறித்து சேரன் கடும் விமர்சனம்..!

9

ந்த மக்கள் போராட்டத்தில் நீங்கள் நின்றிருக்கிறீர்கள், மனசாட்சி இல்லை என்றால் நீங்கள் எப்படி தலைவர் ஆவீங்க விஜய் என்று இயக்குனரும் நடிகருமான சேரன், த.வெ.க தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

 

அதன்பிறகு தனது சினிமா பயணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்த இவர், ஜன நாயகன் திரைப்படம் தான் தனத கடைசி படம் என்று அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஒரு பக்கம், அதிர்ச்சியடைந்தாலும், அவர் அரசியலுக்கு வந்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தமிழகத்தில் 234 தொகுதிக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள விஜய், சட்டசபை தேர்தலை நோக்கிய பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

 

விஜயின் அரசியல் பயணம் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், திரைத்துறையில் இருந்து அவருக்கு ஆதரவாக இதுவரை ஒருவர் கூட கருத்து தெரிவிக்கவில்லை. அமீர் உள்ளிட்ட ஒரு சில திரை பிரபலங்கள், விஜயின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் சேரன் இணைந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சேரன், புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம், அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள?

 

உங்க இருவருக்கும் என்ன பிரச்சினைன்னு எங்களுக்கு தெரியல. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன். அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி. அப்படி என்ன உங்களுக்கு தி.மு.க மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய், நாங்களும் சப்போர்ட் பன்றோம். சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல, இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க.

 

இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல, எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க, மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்? உழைப்பை முதல்ல மதிங்க, உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல, இனிமேலும் மக்கள் கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன பிரச்சினைன்னு அலசி ஆராய்ங்க. பொதுவா வீராவசனம் பேச இது அரட்டை அரங்கம் இல்லை. மக்கள் களம்.

 

ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம். இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க. மறுபடியும் மக்கள் பிரச்சினை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம். மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon