கொரொனாவிலிருந்து மீண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சகார்…!
கொரொனாவிலிருந்து மீண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். தீபக் சகாருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவர் தற்போது இருமுறை கொரொனா நெகட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வந்ததையடுத்து பயிற்சியில் இறங்கியுள்ளார். கொரொனா தொற்றுக்கு ஆளான மற்றொரு வீரர் ருத்துராஜ் வரும் 12ஆம் தேதி பயிற்சிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.







