சினிமா டிக்கெட் முன்பதிவு சேவைக்கட்டணத்தில் மாற்றம்
ஆன்லைனில் எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஆன்லைன் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு தளத்தில் சேவை கட்டணம் எனும் முறையில் மாற்றம் கொண்டு வந்து எத்தனை டிக்கெட் முன் பதிவு செய்தாலும் அதற்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.





