--- --:--:-- --

ஆசையாக மசாஜ் சென்டருக்கு போன இடத்தில் விபரீதம்..!

10

சென்னையில் மசாஜ் சென்டருக்கு சென்ற இளைஞரை அறையில் அடைத்து வைத்து தாக்கி 3 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்த போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதிய காலனி பகுதியை சேர்ந்த செல்போன் எண்ணுக்கு வீட்டிலிருந்தபடி மசாஜ் செய்வதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு இளைஞர் பேசிய பொழுது நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உள்ள வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

 

இதனை நம்பி அந்த வீட்டிற்கு சென்ற இளைஞரை வரவேற்று இரண்டு நபர்கள் அவரை ஒரு அறையின் அடைத்து கை, கால்களை கட்டி போட்டு தாக்கியுள்ளனர்.

 

தொடர்ந்து அவரது ஏடிஎம் கார்டை பறிமுதல் செய்து ஒரு லட்சத்து 36,000 எடுத்துக்கொண்டு அவர் அணிந்திருந்த மூன்று சவரன் நகை, நான்காயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து அடித்து வெளியே அனுப்பியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon