தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவக்கூடிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






